Ticker

6/recent/ticker-posts

Ad Code

கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..!

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மே 2 ஆம் ஆம் தேதி வேட்பாளர்கள், முகவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மறுஉத்தரவு வரும் வரை, மே மாதத்திலும் தொடர்கிறது. இரவுநேர முழுஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2 ந்தேதி ஞாயிறன்று முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் வேட்பாளர்கள், தேர்தல் ஏஜெண்டுகள், வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகைளைப் பின்பற்றி, சினிமா படப்பிடிப்பு, டிவி தொடர் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அன்று சென்னையில் குறைந்த அளவு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரங்களில் ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் உணவு டெலிவரி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கோவில் குடமுழுக்கு விழாக்களில் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்கலாம் என்றும் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments