Ticker

6/recent/ticker-posts

Ad Code

தங்கையை கொலை செய்த அண்ணன்; பணத்துக்காக அரங்கேறிய பயங்கரம்

புதுக்கோட்டையில் இளம்பெண் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் அவரது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வாங்கிய கடனை அடைக்க, தங்கையைக் கொலை செய்து நகை, பணம் திருட முயற்சித்தது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை பொன்நகரைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் மின்வாரியத்தில் பணியாற்றி, ஓராண்டுக்கு முன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது 20 வயது மகள் லோகப்பிரியா புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் எம்.காம். முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த செவ்வாய்கிழமை மாலை அவரது தாய் சிவகாமி வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பியபோது, கழுத்து அறுபட்ட நிலையில் லோகப்பிரியா கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 9 கிராம் தங்க நகை, பீரோவில் வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம், வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டி ஆகியவை காணாமல் போயிருந்தது. பணம் நகைக்காக கொலை அரங்கேறி இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட போலீசார், தனிப்படை அமைத்து கொலையாளியைத் தேடி வந்தனர். லோகப்பிரியாவின் பெரியப்பா மகன் சுரேஷ் அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பழனியப்பன் இறந்தபிறகு, ஆண் துணை இல்லாத அந்தக் குடும்பத்துக்கு சுரேஷ்தான் உடனிருந்து சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார். குடிப்பழக்கம் கொண்ட சுரேஷ், நிலையான வருமானம் தரும் வேலை எதற்கும் செல்லாமல் ஊரைச் சுற்றி பலரிடம் கடன் வாங்கி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி அதிகரிக்கவே, என்ன செய்வது என யோசித்துள்ளார். பழனியப்பன் மின்வாரியத்தில் பணியாற்றியவர் என்பதால் அவர்களது குடும்பம் ஓரளவு வசதியாக இருந்துள்ளனது. எனவே வீட்டில் நிறைய பணம், நகை இருக்கும் என எண்ணிய சுரேஷ், சித்திக்கும் தங்கைக்கும் உதவிகள் செய்வது போல அவ்வப்போது வந்து வீட்டை நோட்டம் விட்டுச் சென்றுள்ளார். சம்பவத்தன்று சிவகாமி வேலைக்குச் சென்றிருந்ததை சாதகமாக்கி, லோகப்பிரியாவின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, வீடு முழுக்க பணம், நகை எங்கே இருக்கும் என அலசியதாகக் கூறப்படுகிறது. பீரோவில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் தவிர பெரிதாக பணமோ, நகையோ சிக்காத நிலையில், லோகப் பிரியா அணிந்திருந்த 9 கிராம் நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியையும் சுரேஷ் கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர். வீடுகளில் தனியாக வசிக்கும் பெண்கள், ஆண்களோ, பெண்களோ, உறவினராகவே இருந்தாலும் அவர்களுடைய நடவடிக்கையை கூர்ந்து கவனித்து பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தி இருக்கிறது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments