Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எதிரொலி..! ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க பல மாநிலங்கள் முடிவு

இந்தியாவில் கொரோனா பாதிப்புடையவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே எண்பது லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் புதிதாக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா, டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இரண்டுவார காலத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.ஏப்ரல் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளும் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனிடையே மகாராஷ்ட்ராவில் பாதிப்பின் எண்ணிக்கை 14 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆயினும் ஒரே நாளில் இறப்பு எண்ணிக்கை முன்பு எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.நேற்று ஒரேநாளில் மகாராஷ்ட்ராவில் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 985 பேர் உயிரிழந்தனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments