கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கூடுதல் வசதிகள் அடங்கிய புதிய ரயில் பெட்டிகளுடன் மலைரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான இந்த சோதனை ஓட்டத்தில் புதிய பெட்டிகளின் சக்கரங்கள் செங்குத்தான மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பல்சக்கர இருப்புபாதையில் சரிவர பொருந்துகிறதா என சோதனை செய்யப்படும் என்றும் விரையில் இவை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் பெட்டியில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை முழுமையாக கண்டு ரசிக்கும் வகையில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள், வசதியான குஷன் இருக்கைகள், மலை குகைக்குள் ரயில் செல்லும் போது தானாக ஒளிரும் மின் விளக்குகள், பாடல்கள் கேட்டபடி பயணிக்க ஸ்பீக்கர் மற்றும் தங்களது அலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதி போன்றவை இடம்பெற்றுள்ளன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments