அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லிக்கு பிரித் வி ஷா நல்ல துவக்கமளித்தார். டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட, பரபரப்பான அந்த ஓவரில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி தோல்வியைத் தழுவியது. கேப்டன் ரிஷப் பந்த் 58 ரன்களும், ஹெட்மயர் 53 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments