முகப்பொலிவிற்காக ஸ்கின் ஹெல்த்கேர் என்ற மருத்துவமனையில் எடுத்துக் கொண்ட சிகிச்சையினால் ரைசாவின் முகம் விசித்திரமான சைசாக மாறி போனதற்கான காரணம் குறித்து சிகிச்சை அளித்த மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். முகபொலிவு சிகிச்சைக்கு முதலில் கடந்த மார்ச் மாதம் 62 ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுக் கொண்டு போடாக்ஸ் சிகிச்சை அளித்துள்ளார் ஸ்கின் ஹெல்த்கேர் மருத்துவ மனையின் மருத்துவர் பைரவி செந்தில். 10 நாட்களை கடந்தும் முகத்தில் எந்த பொழிவும் ஏற்படாததால் அந்த சிகிச்சை திருப்தி அளிக்கவில்லை என்று மீண்டும் மருத்துவர் பைரவி செந்திலை அனுகியுள்ளார் ரைசா. அப்போது அவரிடம் மேலும் 65 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு தெர்மா பில்லர்ஸ் என்ற சிகிச்சை அளித்துள்ளார் மருத்துவர் பைரவி செந்தில். அப்போதே மருத்துவர் பைரவி செந்திலிடம் முதலில் இந்த சிகிச்சை அளித்திருக்கலாமே என்று ரைசா கேட்டுள்ளார். ஆனால் இரண்டாவது சிகிச்சை ரைசாவின் வலது கண் மற்றும் கன்னத்தில் ரத்தகசிவுடன் வீக்கத்தை உண்டாக்கி ஒரு சைசாக மாற்றியதால் மீண்டும் மிரண்டு போன ரைசா, மருத்துவர் பைரவி செந்திலை அனுகியுள்ளார். ஆனால் அவர் பார்க்க மறுத்ததாக கூறப்படுகின்றது. மருத்துவர் முறையான பதில் அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டிய ரைசா இதையடுத்து தன் முகம் ஒரு சைசா மாறி போனதற்கு யார் காரணம் ? என்பதை இன்ஸ்டாகிராம் வாயிலாக போட்டுடைத்தார். இதையடுத்து ரைசாவை மிரட்டும் வகையில் அவதூறு பேச்சை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் பைரவி செந்தில் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பபட்டதாக கூறப்படுகின்றது. இதற்கு பதில் அடி கொடுத்த ரைசா, தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் அலட்சியமான சிகிச்சை அளித்ததால், அழகான தனது முகத்தை கோரமாக்கிய மருத்துவரிடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பினார். ரைசாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பைரவி செந்திலுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலத்த கண்டனம் வெளியானது. இந்த நிலையில் தனது மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் செந்தில் மற்றும் பைரவி செந்தில் மீண்டும் பழைய கதைகளை திரும்பச்சொல்லி சிகிச்சை மேற்கொண்டவர்கள் மது அருந்தக்கூடாது, வெளியில் சுற்றக்கூடாது இதனை மீறினால் இது போன்ற நடக்க வாய்ப்பு உள்ளது எனவே தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தனர். தெர்மா பில்லர்ஸ் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் அவரது முகம் 9 மாதம் வரை பொலிவுடன் இருக்கும் என்றும் படப்பிடிப்பில் லைட் வெளிச்சம் பட பட முக வசீகரம் குறைந்துவிடும் மீண்டும் எடுத்துக் கொள்வது வழக்கம் என்றும் சுட்டிக்காட்டினார் மருத்துவர் பைரவி செந்தில் அப்போது, ரைசா முகத்தில் உள்ள வீக்கம் எப்போது சரியாகும் என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் அவரது முகத்தில் வீக்கமுள்ள பகுதி தற்போது சரியாகி இருக்கும் என்றும், சிகிச்சை எடுத்தால் முகம் வீங்குவது சாதாரண விசயம் அதனை ரைசா பெரிது படுத்தி விட்டார் என்றும் அவரிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் மருத்துவர் செந்தில் கூறினார் அதே நேரத்தில் சிகிச்சையினால் ஏற்பட்ட விபரீதத்தை சரி செய்ய முயற்சிக்காமல் சண்டையிட்டுக் கொள்வதால் இருவருக்கும் பெரிய நன்மை ஏற்பட்டு விடாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments