கொரோனா பாதிப்பு அதிகமுடைய 6 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். மே மாத ஊரடங்கு கட்டுப்பாடுகள் வழிகாட்டல்கள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம், தேனி,திருப்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, டிஜிபி திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இதில் கலந்துகொள்கின்றனர்
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments