மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 66 ஆயிரத்து 358 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக இருந்து வரும் நிலையில், நாடு முழுவதும் தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கும் அதிகமாகவும், தினசரி உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்தும் வருகிறது. நாட்டிலேயே அதிகம் பேர் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து நீடித்து வருகிறது. அம்மாநிலத்தில் இதுவரை 44 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிரா முழுவதும் 895 பேர் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments