முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் வானிலிருந்தபடி வான் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஏவுகணையான ‘பைத்தான்-5’ ஏவுகணையை ஏந்திச் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் கடினமான சூழல்களை எதிர்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், தேஜஸ் போர் விமானம் வானிலிருந்தபடி அனைத்து இலக்குகளையும் 100 சதவீதம் துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பைத்தான்-5 ஏவுகணையும் தேஜஸ் விமானத்தில் இணைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments