Ticker

6/recent/ticker-posts

Ad Code

எவ்வளவு நல்லது செய்தாலும் கெட்டபெயர்தான் மிஞ்சுகிறதா... இதோ அதை மாற்ற 5 எளிய பரிகாரங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

29. 4. 21 சித்திரை 16 வியாழக்கிழமை

திதி: திரிதியை

நட்சத்திரம்: அனுஷம் மாலை 6,28 வரை பிறகு கேட்டை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை

எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை

நல்லநேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை

சந்திராஷ்டமம்: அசுவினி மாலை 6.28 வரை பிறகு பரணி

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

வழிபடவேண்டிய தெய்வம்: ஹயக்ரீவர்

சனி பகவான்

எவ்வளவு நல்லது செய்தாலும் கெட்டபெயர்தான் மிஞ்சுகிறதா?

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, நீங்கள் நலலத்தைச் செய்தாலும் கெட்ட பெயர் தான் வருகிறதா? யோசித்துப் பாருங்கள்... அலுவலகத்தில்கூட நல்லபடியாக வேலை செய்தாலும் உங்களுக்கான பெயர் நல்லதாகவே இல்லை என்று கவலைப்படுகிறீர்களா? முதலில் உங்களை நீங்களே எடை போட்டு பாருங்கள். யாருக்கு வேலை செய்கிறீர்கள், எப்படி வேலை செய்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்.

‘வாழ்வில் முழு திருப்தியை எதிர்பார்க்கிறீர்களா? உங்களால் ஒருபோதும் மனநிறைவுடன் இருக்க முடியாது’ என்கிறது ஜென் தத்துவம். எப்போதுமே உங்களைப் பாராட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூக்கி எறியுங்கள். உங்களைப் புரிந்து கொள்ள முடியாதவாறு இருக்கிறீர்களா, அல்லது நீங்கள் யாருக்கு நல்லது செய்கிறீர்களோ அவர்களை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா என்று எண்ணிப் பாருங்கள். நல்லது செய்தாலும் கெட்ட பெயரே மிஞ்சுகிறது என்றால் அவர்களிடம் இன்னும் அதிகமாக அன்பு வைக்கப் பாருங்கள் என்கிறது உளவியல்.

ஆனால், சனியின் ஆதிக்கம் உச்சமாகக் கொண்டவர்களுக்கும், குருவின் கருணை குறைவாகக் கொண்டவர்களுக்கும் இப்படி நன்மை செய்தாலும் கெட்ட பெயரைக் கொடுக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இப்படிப்பட்ட பிரச்னையிலிருந்து தப்பி அதுவே சில பரிகாரங்களையும் சொல்கிறது. அதை அறிந்துகொள்ளக் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்

விரிவான ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

மேஷம்

பொறுமை : சந்திராஷ்டம தினம் என்பதால் சொல்லிலும் செயலிலும் பொறுமை தேவைப்படும் நாள். இறைவழிபாட்டில் கவனம் செலுத்த மனம் அமைதி பெறும். - இறைவன் இருக்க பயம் ஏன்?!

ரிஷபம் :

பிரச்னை : செலவுகள் அதிகரிக்கும். சின்னச் சின்னப் பிரச்னைகளும் ஏற்பட்டு நீங்கும். முடிவுகளை எடுக்கும் முன்பாகப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்பது அவசியம். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்

மிதுனம்

உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உண்டாகும் சிறு சிக்கல்களை உங்கள் சாமர்த்தியத்தால் வெல்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளில் துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அது சாதகமான பலனைத் தரும். - துணிவே துணை!

கடகம்

பணிச்சுமை : புதிய முயற்சிகளில் கவனம் தேவை. வழக்கமான பணிகளையும் சிரத்தையோடு செய்துவாருங்கள். பணிச்சுமை காரணமாக அலைச்சலும் அசதியும் ஏற்படும். - டேக் கே ப்ளீஸ்

சிம்மம்

கவனம் : எதிர்பாராத பணவரவு ஏற்படும் நாள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். என்றபோதும் வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். - கேர் ஃபுல் ப்ளீஸ்

கன்னி

சாதகம் : இன்று நாள் முழுவதும் சாதகமாக உள்ளது. செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் மனதைப் புரிந்துகொள்வார்கள். - சாதகமான ஜாதகம் இன்று!

துலாம்:

பணவரவு : இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். - என்ஜாய் தி டே

விருச்சிகம்

மகிழ்ச்சி : குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். பிற்பகலுக்கு மேல் பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - ஜாலி டே!

தனுசு:

ஆரோக்கியம் : வரவு ஏற்ற செலவுகள் ஏற்படும் நாள். பேச்சில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. - ஹெல்த் இஸ் வெல்த்

மகரம்

விவாதம் : குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் சொற்படி நடப்பார்கள். என்றாலும் தேவையற்ற விவாதங்களைத் தவிருங்கள். - நோ ஆர்கியுமென்ட்ஸ்

கும்பம்

இழுபறி : செயல்கள் அனைத்தும் சிறு இழுபறிக்குப் பின்னரே முடியும் என்றாலும் சாதகமாகும். பண உதவி கிடைக்கும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். - விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை.

மீனம்

ஆதாயம் : இந்த நாளின் முன்பாதியில் குழப்பங்கள் நீடித்தாலும் பின்பாதி சாதகமாக இருக்கும். பணவரவு, உறவினர்களின் ஆதரவும் கேட்காமலேயே கிடைக்கும்.- ஆல் தி பெஸ்ட்!



from Latest News

Post a Comment

0 Comments