Ticker

6/recent/ticker-posts

Ad Code

40 வயது நோயாளிக்காக தமது படுக்கையை விட்டுக் கொடுத்த 85 வயது முதியவர் உயிரிழப்பு..! நாக்புரில் நெகிழ்ச்சி சம்பவம்

நாக்புரில் 40 வயதுடைய கொரோனா நோயாளிக்காக மருத்துவமனையில் தாம் முன்பதிவு செய்த ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்த 85 வயது முதியவர் நாராயண் தபாத்கர் என்பவர், வீட்டுக்குப் போய் அமைதியான முறையில் காலமானார். ஆர்,எஸ்.எஸ். இயக்கத்தின் உறுப்பினரான நாராயண் மருத்துவமனையில் சுவாசப் பிரச்சினையால் அனுமதிக்கப்பட இருந்த நிலையில் ஒரு பெண் தனது கணவருக்குப் படுக்கையைத் தருமாறு கேட்டு கெஞ்சுவதைப் பார்த்தார் நாராயண். தனது வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டதாகவும், சிகிச்சைக்கு வந்த இளைஞர் உயிர்வாழவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் அந்த முதியவர். தமது படுக்கையை அந்த நபருக்குத் தரச் சொல்லி கையெழுத்திட்ட அவர் வீடு திரும்பிய மூன்று நாட்களில் காலமானார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments