கேரளாவில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மே 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் தெருவீதிகளில் நடமாடுவது, ஊர் சுற்றுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். தானாக முன் வந்து விழாக்களை தவிர்த்து, பயணங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு மேலும் கட்டுப்பாடுகளை திணிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. தற்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதே தளர்வுகளுடன் வரும் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments