ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உடைய பகுதிகளில் கட்டுப்பாட்டுகளை அதிகப்படுத்தும்படி மத்திய அரசு அண்மையில் வலியுறுத்தியிருந்தது. பல்வேறு மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. பத்து சதவீதத்திற்கு மேல் பாதிப்பு உடைய பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதே போன்று 60 சதவீதப் படுக்கைகள் நிரம்பிய மருத்துவமனைகள் குறித்த தகவல்களை சேகரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments