இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து அங்கு நாடு முழுவதும் வரும் 30ம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளையும் மூடுவதற்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 647 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள பள்ளிகளை மூடுவது என முதலில் முடிவானது. எனினும், இந்த இரு மாகாணங்களை தவிர்த்து பிற மாகாணங்களிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிய வந்தது. இதையடுத்து நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் வரும் 30ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments