அமெரிக்க விமானப்படையின் சி 5 எம் சூப்பர் கேலக்சி என்ற விமானமும், சி 17 குளோப் மாஸ்டர் என்ற விமானமும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களுடன் இன்று இந்தியா வந்து சேர உள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள், பரிசோதனை கருவிகள், என் 95 மருத்துவ முகக்கவசங்கள், நாடித்துடிப்பைப் பரிசோதிக்கும் ஆக்சி மீட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. விரைவில் இந்தியாவில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கவும் உதவவும் நிபுணர்க்குழு ஒன்றையும் அனுப்பி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments