Ticker

6/recent/ticker-posts

Ad Code

தஞ்சாவூர்: 200 பெண்களை மிரட்டி ஆபாசப் படம் - எம்.ஏ., எம்.பில்., பி.எட் பட்டதாரி கைது!

புதுச்சேரியில் ஆன்லைன் வகுப்புக்கு வாங்கிக் கொடுத்த ஸ்மார்ட் போனால் முகநூலுக்கு அடிமையான 14 வயது சிறுமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி ஆபாசப் படம் எடுத்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்த முதுகலைப் பட்டதாரியை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த பெற்றோர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக ஆண்ட்ராய்டு போனை வாங்கிக் கொடுத்தனர். அதன்பிறகு படிப்பில் சுட்டியான அந்தச் சிறுமி,எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கியிருந்திருக்கிறார். தங்கள் மகள் இரவு பகலாக செல்போனும் கையுமாக இருந்ததால் ஆன்லைன் வகுப்பில் நன்றாக படிக்கிறாள் என்று நினைத்து சந்தோஷப்பட்டிருக்கின்றனர். 4 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் நள்ளிரவில் கண் விழித்து எழுந்த தாய், பக்கத்து அறையில் செல்போன் முன்பு தனது மகள் ஆடையின்றி நிற்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பதறிபோய் சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்த போது முகனூல் பிளாக்மெயிலரிடம் சிக்கிய விபரீதம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்லைன் வகுப்புக்காக ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தத் தொடங்கிய அந்தச் சிறுமி, அதில் முகநூலை இன்ஸ்டால் செய்து சேலம் என்ற முகவரியில் இருந்த அழகான போட்டோவுடன் இருந்த இளைஞருக்கு நட்பு அழைப்பும் விடுத்திருக்கிறார். அவரும் ஏற்றுக்கொள்ள இருவரும் சாதாரணமாக ’சாட்’ செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். நாளடைவில் சிறுமியை காதலிப்பதாகக் கூறிய அந்த இளைஞர், அவருடன் பாலியல் ரீதியில் பேச ஆரம்பித்திருக்கிறார். சிறுமிக்கும் மேற்படி பேச்சுகள் பிடித்துவிடவே அவரும் தொடர்ந்திருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த இளைஞரின் வார்த்தையால் மூளைச்சலவை செய்யப்பட்ட அந்த சிறுமி மகுடிக்கு ஆடும் பாம்பாக மாறியுள்ளார். அந்த இளைஞரை நம்பி, தனது நிர்வாண போட்டோவையும், வீடியோவையும் அனுப்ப, பதிலுக்கு அந்த இளைஞரும் தனது அந்தரங்க வீடியோவை அனுப்பியிருக்கிறார். சிலமாதங்களாக இது தொடர்ந்த நிலையில், ஒரே நாளில் பலமுறை ஆபாசமாக வீடியோ கால் பேசும்படி சிறுமியை வற்புறுத்தியிருக்கிறார் அந்த இளைஞர். சிறுமியால் அது முடியாமல் போகவே, ’உனது வீடியோக்களை இன்டர்நெட்டில் விட்டுவிடுவேன்’ என்று மிரட்டத் தொடங்கியிருக்கிறார் இளைஞர். அதனால் வேறு வழியின்றி சிறுமியும் பெற்றோர்களுக்கு தெரியாமல் ’லைவ் சாட்’ , ‘வீடியோ கால்’ என தொடர்ந்திருக்கிறார். இதனால் தான் நள்ளிரவு நேரத்திலும் ஆடையின்றி நிற்கும் பரிதாபத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறாள் அந்த சிறுமி. தனது மகளுக்கு நேர்ந்தது போல மற்ற பெண்களிடமும் தொடரக் கூடாது என்று நினைத்து குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவிடம் புகாரளித்திருக்கின்றனர் பெற்றோர் அவர்களது பரிந்துரையின் பேரில் வழக்குப் பதிவு செய்த முத்தியால்பேட்டை காவல்துறையினர், சிறுமியை மிரட்டிய ஃபேஸ்புக் முகவரியில் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது அவருக்கும் சிறுமிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் சிறுமியுடன் பேசியவர் பேக் ஐடி என்பதும் தெரியவந்தது. சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணையில் சிறுமியிடன் வீடியோ கால் பேசிய இளைஞனின் எண்ணைப் பயன்படுத்தி விசாரித்த போது அந்த பிளாக் மெயிலர் தஞ்சாவூரைச் சேர்ந்த எம்.ஏ., எம்.பில்., பி.எட் பட்டதாரியான கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது. திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் திருப்பூர் சாயப் பட்டறை ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்த கமலகண்ணன் வீடியோ சாட்டிங் சேட்டையில் ஈடுபட்டுள்ளான். போலி முக நூல் முகவரி மூலம் பல பெண்களை ஏமாற்றி, அவர்களுடன் பாலியல் ரீதியில் சாட் செய்து, காதலிப்பது போல நடித்து அவர்களிடம் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்களை வாங்கி வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. கமலக்கண்ணன் வைத்திருந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அதில் அந்த சிறுமி மட்டுமல்லாமல் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் 500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்து காவல்துறையினரே வாயடைத்துப் போயுள்ளனர். அதையடுத்து காமக் கண்களோடு சமூக வலைதளத்தில் வலம் வந்த கமலக்கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆன்லைன் வகுப்பு முடிந்த கையோடு தங்கள் வீட்டு பிள்ளைகளிடமிருந்து ஸ்மார்ட் போன்களை பெற்றோர் வாங்கி வைத்துக் கொண்டால் போதும், இது போன்ற விபரீதங்களை முற்றிலும் தவிர்க்கலாம்..!

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments