நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. இதற்கு,https://www.cowin.gov.in/home என்ற, இணையதளத்திற்குள் சென்று, 'ரிஜிஸ்டர் மை செல்ப்' என்பதை அழுத்த வேண்டும். பின், மொபைல் போன் எண் பதிவு செய்து, பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.ஆதார் எண் உள்ளிட்ட, அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிந்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மே, 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments