Ticker

6/recent/ticker-posts

Ad Code

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி..! முதல் நாளிலேயே சுமார் 1 கோடி பேர் தடுப்பூசி போட விரும்பி விண்ணப்பம்

18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட நேற்று முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே சுமார் ஒரு கோடி பேர் தங்கள் பெயர்களை பதிவுசெய்தனர். முதல் 3 மணி நேரத்தில் 80 லட்சம் பேர் கோவின் COWIN இணையதளத்தில் விண்ணப்பம் செய்தனர். இதனால் இணையதளம் செயலிழந்து விட்டதாக வெளியான வதந்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது. இணையதளம் செயல்பாட்டில் இருப்பதாகவும் தடுப்பூசிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 14 கோடியே 50 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கோவின் இணையத்தளம், ஆரோக்கிய சேது செயலி, உமாங் செயலி ஆகியவற்றின் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments