மகாராஷ்ட்ராவில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 1 முதல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடலாம் என்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே மும்பையில் 40 மையங்களில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனைகள் மூன்றாம் கட்டத் தடுப்பூசி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments