கொரோனா பாதிப்பு அதிகமுடைய 150 மாவட்டங்களில் ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அடுத்த சில வாரங்களுக்கு கடும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும்தான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று உள்துறை அமைச்சகம் சார்பில் ஊரடங்கு நிலவரத்தை ஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதியளித்து முழு ஊரடங்கை பாதிப்பு அதிகம் உள்ள 150 மாவட்டங்களில் அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். ஆயினும் மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்த பின்னரே மத்திய அரசு முடிவை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments