30.4. 21 சித்திரை 17 வெள்ளிக்கிழமை
திதி: சதுர்த்தி
நட்சத்திரம்: கேட்டை மாலை 4.56 வரை பிறகு மூலம்
யோகம்: மரணயோகம் மாலை 4.56 வரை பிறகு அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம்: பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம்: காலை 9.30 முதல்10.30 வரை / பகல் 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம்:பரணி மாலை 4.56 வரை பிறகு கிருத்திகை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
இன்று: சங்கடஹரசதுர்த்தி விரதம்
முன் ஜென்மத்தில் நீங்கள் யாராக இருந்தீர்கள்? - 12 லக்னங்களுக்கான விளக்கங்கள்!
முன் ஜென்மம் இருந்ததா? நம் சமயத்திலும் முன் ஜென்மம் குறித்த நம்பிக்கையும் உள்ளது. நம்முடைய சமயம் மட்டுமின்றி, பௌத்தம் சமணம் போன்ற சமயங்களும் முற்பிறவி குறித்து நம்புகின்றன. ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்’ என்பார் மாணிக்கவாசகர். உங்கள் ஏக்கத்தைச் சார்ந்து, உங்கள் கர்ம வாசனைகளைச் சார்ந்து இயற்கை அதற்கு ஏதுவான உடலைத் தருகிறது என்பதுவே நம்பிக்கை.
இந்தப் பிறவியே முற்பிறப்பின் வினையினால் நிகழ்கிறது என்றால் நாம் முற்பிறவியில் என்னவாக இருந்திருப்போம் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். நாடி ஜோதிடத்தில் சுவடிகளில் கர்ம காண்டம் பார்த்து ஒருவரின் முற்பிறப்பின் விவரங்களைச் சொல்லும் வழக்கம் உள்ளது. அதேபோன்று முன் ஜென்ம கர்மாக்களின் நிலையை ஜாதக அடிப்படையிலும் கணிக்க முயன்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அப்படி 12 லக்னக்காரர்களுக்கும் முன் ஜென்மத்தில் என்னவாகப் பிறந்திருப்பார்கள் அல்லது அவர்களின் குணாதிசயம் யாருடையதாக இருக்கும் என்பன குறித்த தகவல்களை வழங்குகிறது நம் ஜோதிடம். இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.
இன்றைய சுருக்கமான ராசிபலன்
விரிவான இன்றைய ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மேஷம்
பதற்றம் : தேவையற்ற கவலைகளால் மனதில் பதற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இறைவழிபாட்டில் மனதைச் செலுத்துங்கள். - பதறாத காரியம் சிதறாது!
ரிஷபம் :
நம்பிக்கை : இன்று மனதில் நம்பிக்கையும் துணிவும் அதிகரிக்கும். முக்கியப் பணிகளை ஒத்திவைக்காமல் இன்றே செய்துமுடித்துவிடுங்கள். வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்திடுங்கள். - ஆல் தி பெஸ்ட்!
மிதுனம்
வரவு : எதிர்பாராத பணவரவு உண்டாகும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். தந்தைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். - ஜாலி டே
கடகம்
உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்திலிருந்த வருத்தங்கள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகளும் தேடிவரும். பிற்பகலுக்கு மேல் செயல்களில் கவனம் தேவை. - ஆல் இஸ் வெல்!
சிம்மம்
சாதகம் : அனைத்தும் அனுகூலமாக இருக்கும் நாள். காரியங்கள் சாதகமாக முடியும். தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள் தேடிவந்து மன்னிப்புக் கேட்பார்கள். - சாதகமான ஜாதகம் இன்று!
கன்னி
நற்செய்தி : இன்று எதிர்பார்த்த நற்செய்தி வரும். உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. - என்ஜாய் தி டே!
துலாம்:
பக்தி : மனம் இறைவழிபாட்டில் ஈடுபடும். காரியங்கள் அனுகூலமாகும். பேச்சில் பொறுமை அவசியம். உணவு விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை. - இறைவன் இருக்க பயம் ஏன்?!
விருச்சிகம்
செலவு : செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். பிற்பகலுக்கு மேல் சூழ்நிலை சாதகமாகும். - சிக்கனம் தேவை இக்கணம்!
தனுசு:
கவனம் : வழக்கமான பணிகளிலும் கவனம் அவசியம். செலவுக்கு ஏற்பப் பணவரவும் உள்ளதால் கவலைப்பட மாட்டீர்கள். குடும்பத்தினர் ஆறுதலாக இருப்பார்கள். - டேக் கேர் ப்ளீஸ்!
மகரம்
நன்மை : பணவரவு உண்டு. காரியங்கள் இன்று அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் நல்ல செய்திகள் வந்து சேரும். - நாள் நல்ல நாள்!
கும்பம்
பொறுமை : அனைத்தும் சாதகமாக இருந்தபோதும் சொல்லிலும் செயலிலும் பொறுமை அவசியம். குடும்பத்தினர் உங்கள் மனதைப் புரிந்துகொள்வார்கள். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!
மீனம்
உதவி : உறவினர்களும் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். செலவுகளில் மட்டும் சிக்கனம் தேவை. - உதவும் கரங்கள்!
from Latest News
0 Comments