Ticker

6/recent/ticker-posts

Ad Code

பொது முடக்கம் நீட்டிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை..! மே, 1, 2ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?

மே 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குடன் மேலும் ஒருநாள் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது இன்று தெரிய வரும். தமிழகத்தில் மாதமதோறும் வெளியிடப்படும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு, இன்று அல்லது நாளை தமிழக அரசு வெளியிட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை காரணமாக, குறைந்தது இரண்டு நாட்கள், முழு முடக்கத்துடன், கெடுபிடியுடன் கூடிய, கடும் நெறிமுறைகளும் இந்த அறிவிப்பில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை காரணமாக, மே, 1, 2ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதை ஏற்று, இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது, மே மாதத்தில் மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments