வங்கதேசத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி வங்கதேசம் சென்றார். அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மோடி இந்தியா திரும்பிய பின்னரும் தொடரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. போராட்டத்தின் போது சில வழிபாட்டுத்தலங்களும், ரயில் ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளானதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments