Ticker

6/recent/ticker-posts

Ad Code

மூன்று ரபேல் ரக போர் விமானங்கள் நாளை இந்தியா வருகை..! ஓமன் அருகே நடுவானில் எரிபொருள் நிரப்பவும் ஏற்பாடு

மூன்று ரபேல் ரக போர் விமானங்கள் நாளை இந்தியாவில் தரையிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்திய அரசாங்கம் முடிவு செய்த நிலையில், தற்போது வரை மூன்று கட்டமாக 11 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. இந்நிலையில் நான்காம் கட்டமாக மூன்று விமானங்கள் பிரான்சிலிருந்து புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விமானங்கள் ஹரியானா மாநிலம் அம்பாலா விமான தளத்தில் இரவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments