Ticker

6/recent/ticker-posts

Ad Code

கோவில் தேர் கொடியால் உருவான அடி தடி..! சாலை மறியலால் பதற்றம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் இரு வேறு குழுக்களை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் கொடிகளுடன் தேரில் ஏற முயன்றதால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவரை 20க்கும் மேற்பட்டோர் சேர்ந்து அடித்து உதைத்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தெற்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்கிழமை மாலை தொடங்கியது. ஒரு குழுவை சேர்ந்த மக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க மற்றொரு குழுவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆடியபடியே தேருக்கு சன்னக்கட்டை போட்டுக் கொண்டு வந்தனர். அம்மன் தேர் கோவிலை நெருங்கிக் கொண்டிருந்த போது சன்னக்கட்டை போட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் தங்கள் அமைப்பின் கொடியை எடுத்து ஆட்டிக் கொண்டே தேரில் ஏறியதாக கூறப்படுகின்றது. இதற்கு பதில் சொல்லும் விதமாக தேரை இழுத்த குழுவை சேர்ந்த இளைஞர்கள் மரத்தின் மீதும், கோவில் மீது ஏறி நின்று தங்கள் அமைப்பின் கொடியை பிடித்து அசைத்தனர். அதில் ஒரு இளைஞர் தேரில் ஏற முயன்றதால் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் சன்னக்கட்டை போடுவதை விடுத்து கொடியுடன் வந்த இளைஞரை விரட்டி,விரட்டி தாக்கினர். அங்கு கூடியிருந்த பெரியவர்கள் அதனை தடுக்க இயலாமல் விலகி நிற்க, ஊர்க்காவல் படைவீரர்கள் ஓடிவந்து அந்த இளைஞ்ரை மீட்க முயன்றனர்.அந்த இளைஞரை மீட்க இயலாத நிலையில் இரும்பு கம்பி, மற்றும் கட்டைகளால் கடுமையாக தாக்கியதால் காயமடைந்த அந்த இளைஞர் அம்மன் தேரின் முன்பு மயங்கி விழுந்தார். அந்த இளைஞரை சிலர் தூக்கிச்சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கப்பட்ட இளைஞரின் தரப்பினர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது மறியலின் போது ஆம்புலன்சுக்கு மட்டும் போராட்டக்காரர்கள் வழிவிட்டனர். இரு தரப்பினரின் மோதலால், தேர் கோவில் நிலைக்கு வராமல் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க இரு குழுவினர் வசிக்கும் பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments