மகாராஷ்டிராவில் சீக்கியர்களின் மத ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அம்மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாந்தேத் என்ற இடத்தில் உள்ள குருத்வாரா சார்பில் ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். மேலும் குருத்வாராவின் வாசலில் தடுப்புகளையும் போலீசார் அமைத்திருந்தனர். போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குருத்வாராவுக்குள் இருந்த 400க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் காவலர்களைத் தாக்கினர். தடுப்புகளை தூக்கி எறிந்த சீக்கியர்கள், தாங்கள் வைத்திருந்த வாட்களால் போலீசாரை சரமாரியாக வெட்டினர். இந்தக் கலவரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பாதுகாவலர் உள்பட 4 காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments