Ticker

6/recent/ticker-posts

Ad Code

சபரிமலை கோவிலில் இன்று நடைபெறுகிறது ஆராட்டு விழா

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆராட்டு விழா இன்று நடைபெறுகிறது. பங்குனி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவிலில் கடந்த 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பிறகு அதன் தொடர்ச்சியாக பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெற்று வந்தன. இன்று காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பசாமிக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது. தொடர்ந்து மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. இரவு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படுகிறது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments