இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதிக்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பது மிகவும் திருப்தியளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. தெற்காசிய மண்டலத்தில் அமைதி நிலவ முயற்சித்து வரும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படத் தயார் என்றும் சீனா அறிவித்துள்ளது. சீனா பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடு என்று அந்நாட்டு அதிபர் ஆரிப் அலி கூறியிருந்த நிலையில் அண்மையில் இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Zhao Lijian இந்தியாவுடன் பாகிஸ்தான் மேற்கொண்ட அமைதி முயற்சியை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments