பெங்களூரில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்திலும் பெங்களூருவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், அடுத்த 15 நாட்களுக்கு எந்த ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் அனுமதிக்கப்படாது என்றும், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் வருபவர்களின் எண்ணிக்கையும் கண்டிப்பாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார். கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் இயங்கும் என்ற எடியூரப்பா, 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று இருப்பதாகக் கூறினார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments