கொரோனா காலத்திலும் தொழிற்சாலைகள் சிறப்பாக இயங்க நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கொரேனா காலத்திலும் தொழிற்சாலைகள் சிறப்பாக இயங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்படும் மாநிலமாகவும், அனைத்து துறைகளிலும் விருது வாங்கிய மாநிலமாகவும் தமிழகம் திகழ்வதாக குறிப்பிட்ட முதலமைச்சர், 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து தேசிய விருதுகளைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். அம்பத்தூர் தொகுதியில் ஏழை எளிய மக்கள் சிறப்பான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள 9 அம்மா மினி கிளினிக்குகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அனைத்து குடும்பத்தினருக்கும் வாஷிங் மெஷின் வழங்கப்படும் என்றும், மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments