Ticker

6/recent/ticker-posts

Ad Code

சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவிட மாட்டோம் -முதலமைச்சர் திட்டவட்டம்

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதால் சிறுபான்மையின மக்கள் பயப்படத் தேவையில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் நேற்று ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திருவிக நகர், எழும்பூர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்துப் பேசிய அவர், சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்த விடமாட்டோம் எனத் தெரிவித்தார். கொரோனா பாதிப்பின்போது வெளிமாநிலத் தொழிலாளர்களை அரசு செலவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது பற்றி குறிப்பிட்ட முதலமைச்சர், கொரோனா காலத்திலும், மழை வெள்ளத்தின்போதும் சென்னை மக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கியதாகத் தெரிவித்தார். ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் ஜெயக்குமாருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். போக்குவரத்து நெரிசலற்ற மாநகராக சென்னை மாநகரை மாற்ற அதிமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் கூறினார்.  திருவொற்றியூர் வேட்பாளர் குப்பனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டபோது, தனது தாயார் குறித்த ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சு குறித்து பேசத் தொடங்கிய முதலமைச்சர், பேச்சு வராமல் கண்கலங்கினார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments