வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும் மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments