Ticker

6/recent/ticker-posts

Ad Code

தபால் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா விவகாரத்தில் உதவி ஆணையர் சஸ்பெண்ட்

திருச்சி காவல் ஆணையரை பணியிட மாற்றம் செய்தும், பொன்மலை காவல் உதவி ஆணையரை சஸ்பெண்ட் செய்தும், தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பான விசாரணையில்,  தங்களுக்கு கிடைத்த முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன், தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்படுவதாக கூறப்பட்டுள்ளது. பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி, திருச்சி பொன்மலை சரக சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் தமிழ்மாறனை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments