திமுக முன்னாள் அமைச்சரும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவருக்கு, கடந்த சில தினங்களாக லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments