காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், ஒரு ராணுவ வீரர் உயிர் தியாகம் செய்துள்ளார். சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய பதிலடியில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments