திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்த கூட்டம் நாளை காலை 11.30 மணி அளவில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் தாராபுரம் தொகுதி வேட்பாளர் எல்.முருகன் உள்பட 13 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments