நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 290 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறியுள்ள ரயில்வே மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இது முந்தைய அளவைவிட 7 விழுக்காடு குறைவு என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், கடந்த நிதியாண்டில் 313 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி தற்போது குறைந்திருந்தாலும், சிக்கலான காலகட்டத்தில் இந்த நிலைமையை எட்டியிருப்பது சற்று மகிழ்ச்சியான விஷயம் என்று கூறினார். மேலும் தொற்றுநோயையும் மீறி, இந்தியாவுக்கான அன்னிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை ஆண்டாக இருக்கும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments