பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர் சந்திப்பில் இருந்த பாஜக எம்எல்ஏவை விவசாயிகள் சரமாரியாகத் தாக்கினர். முக்த்சர் மாவட்டத்தில் உள்ள மாலவுட் என்ற இடத்தில் பாஜக எம்எல்ஏ அருண் நாரங் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதனையறிந்த விவசாயிகள் அவர் மீது கருப்பு மையை ஊற்றி, வீதி வீதியாக இழுத்துச் சென்று அடித்து உடைகளைக் கிழித்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வந்த போலீசார் எம்எல்ஏவை மீட்டுச் சென்றனர். எம்எல்ஏ மீதான தாக்குதலுக்கு முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாபில் ஏற்கனவே மற்றொரு எம்எல்ஏ தாக்கப்பட்டிருந்தார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments