பாலிவுட் நடிகரான அஜாஸ் கானை போதைப் பொருள் வழக்கில் மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர். பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பங்கேற்பாளரான அஜாஸ் கானை போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் இருந்து மும்பை திரும்பிய அவரை விமான நிலையத்திலேயே கைது செய்த போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை தனியிடத்தில் அடைத்து வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அஜாஸ்கான் தொடர்புடைய வீடுகள் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. அஜாஸ் கான் கைது செய்யப்படுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் பேஸ்புக்கில் அவதூறு பதிவை போட்டதாகவும் மூன்று முறை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments