உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம் காணாமல் போனதற்கு எலிகளே காரணம் போலீசார் தெரிவித்துள்ளனர். இடா மாவட்டத்தில் பிடிபட்ட கள்ளச்சாராய பெட்டிகள் கோட்வாலி தகத் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஆயிரத்து 400 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய பாட்டில்கள் மாயமாகி உள்ளன. இதற்கு காவல் நிலையத்தில் உள்ள எலிகளே காரணம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 239 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய பாட்டில்களும் எலிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்நிலைய குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் எழுத்தர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments