Ticker

6/recent/ticker-posts

Ad Code

மத்திய அரசின் சாதனைகளைக் கூறி பிரதமர் பிரச்சாரம் செய்யாதது ஏன் ? மு.க. ஸ்டாலின்

தாராபுரத்திற்கு வந்த பிரதமர் மோடி, மத்திய அரசின் சாதனைகளைப் பற்றி பேசாமல் உண்மைக்கு மாறான கருத்துக்களைப் பேசியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ராஜபாளையத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குக் கேட்பதுதான் பிரதமருக்கு அழகு என்று கூறிய ஸ்டாலின், தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உண்மைக்கு மாறான கருத்துக்களைப் பிரதமர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதும், பால்வளத்துறை மீதும் ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகக் கூறிய ஸ்டாலின், அதுகுறித்து பதிலளிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினர். திமுக ஆட்சிக்கு வந்ததும் உழவர் சந்தைத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும், விவசாயிகள் புதிய மின்இணைப்பு கோரி விண்ணப்பித்தால் உடனடியாக மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். தமிழகத்தில் காலிப் பணியிடங்களாக இருக்கும் 3 லட்சத்து 50 ஆயிரம் அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார் என்று கூறிய ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்றும், பட்டாசு தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றும் பேசினார்.  

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments