Ticker

6/recent/ticker-posts

Ad Code

'பணம் கொடுத்தால் பிடித்து கொடுப்போம்! '- போர்டை பார்த்து ஓடிப் போகும் அரசியல்வாதிகள்

மதுரையில் பணம் கொடுத்தால் பிடித்து கொடுப்போம் என்ற போர்டை பார்த்ததும் குடியிருப்புக்குள் செல்லாமல் அரசியல்வாதிகள் எஸ்கேப் ஆகி விடுகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மதுரை கோச்சடை பகுதியில் அமைந்துள்ள சாந்தி சதன் குடியிருப்பு வளாகத்தில் சுமார் 600 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த குடியிருப்புக்குள் உள்ளனர். இந்த குடியிருப்புக்குள் புகுந்த சில அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக தெரிகிறது. இதை தடுக்கும் வகையில், குடியிருப்பு வளாகத்தின் முகப்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்யும் அரசியல் கட்சியினர் குறித்து தேர்தல் ஆணைய அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குடியிருப்புவளாக செயலாளர் பாலகுருவிடம் கேட்டபோது, சுயமாக சிந்தித்து வாக்களிக்க முயற்சிக்கும் வாக்காளர்களை தங்கள் வசம் கவருவதற்காக பல அரசியல் கட்சியினர் பணத்தை வழங்கி வாக்குகளை பெற முயற்சி செய்கின்றனர். பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதனால் நல்ல ஆடசியாளர்களை உருவாக்க முடியாது. இதனால் எங்களது குடியிருப்பு வளாகத்தில் உள்ள வாக்காளர்கள் சமரசமின்றி சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அனைவரது ஒப்புதலையும் பெற்ற பின்னரே இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments