Ticker

6/recent/ticker-posts

Ad Code

அமெரிக்காவில் கரடி ஒன்று தனது குட்டிகளுடன் சாலையை கடப்பதற்காக போக்குவரத்து நிறுத்தம்..!

அமெரிக்காவில் கரடி ஒன்று தனது குட்டிகளுடன் சாலையைக் கடக்கும் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கனெக்டிக்கட் மாகாணத்தின் வனப்பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, கரடி ஒன்று தனது 4 குட்டிகளுடன் சாலையைக் கடந்தது. ஒரு குட்டியைக் கவ்விச் சென்ற நிலையில் மற்ற இரு குட்டிகளும் தாயின் பின்னால் சென்றன. இறுதியில் பயந்து போன இரண்டு குட்டிகள் சாலையில் இருபுறம் ஓட்டம் காட்டிக் கொண்டிருந்தன. ஆனாலும் குட்டிகளை சாலையைக் கடக்க வைத்துச் சென்றது தாய்க் கரடி. இந்நிகழ்வுக்காக போலீசார் போக்குவத்தை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments