பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இன்று இந்தியா வருகின்றன. நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் 2022ம் ஆண்டுக்குள் 36 விமானங்களை இந்தியா கொண்டு வர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்தாண்டு ஜூலையில் 5 விமானங்கள் நம் நாட்டுக்கு வந்து சேர்ந்தன. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பரில் 3 விமானங்கள் வந்தன. இந்தாண்டு ஜனவரி 27ல் மேலும் 3 விமானங்கள் வந்து சேர்ந்தன. இந்நிலையில், நான்காவது கட்டமாக மேலும் 3 போர் விமானங்கள் பிரான்சில் இருந்து புறப்பட்டு அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப் படைத்தளத்துக்கு இன்று வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments