அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வளர்ச்சிக்கான கூட்டணி என்றும், இதனையே ஒற்றை நோக்கமாக கொண்டிருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் தாராபுரத்தில் நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை வளர்ச்சி மட்டுமே தங்கள் நோக்கம் என்று கூறிய பிரதமர், ஆனால், காங்கிரஸ் மற்றும் திமுகவை பொறுத்தவரை வாரிசு அரசியல் தான் நோக்கம் என விமர்சித்தார். திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பெண்களை அவமதிப்பதை மக்கள் கவனித்து வருவதாக கூறிய பிரதமர், ஆ.ராசாவை 2ஜி ஏவுகணை என மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து, புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றுப் பேசினார்.தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, ஆதரவு அலை வீசுவதாக, அப்போது பிரதமர் குறிப்பிட்டார். கடந்த முறை வந்தபோது அளித்த உறுதிமொழியின்படி, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை வசதி, உட்கட்டமைப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெறுவதாக, பிரதமர் கூறினார்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments