Ticker

6/recent/ticker-posts

Ad Code

வங்காள தேசத்தில் பிரதமர் மோடி கோவில்களுக்குப் போனது குறித்த சர்ச்சைகளுக்கு வெளியுறவுத்துறை விளக்கம்

வங்காள சுற்றுப் பயணத்தின் போது பிரதமர் மோடி அங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனம் செய்தது குறித்த சர்ச்சைகளுக்கு வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் மத்துவா இன மக்களின் வாக்குகளைப் பெற மோடி அவர்கள் வணங்கும் ஆலயங்களுக்குச் சென்றது, அந்த இனமக்களுடன் சந்தித்து உரையாடியது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாக முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வரதன் சிருங்காலா, 2015ம் ஆண்டு வங்காளதேசம் வந்தபோது பிரதமர் மோடி தாக்கூர்பானி மற்றும் ஜாசோரேஸ்வரி காளி ஆலயங்களை காண விரும்பினார் என்றும் இந்த முறை பயணத்தின் போது அந்த கோவில்களுக்கு சென்றதால் மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். பிரதமரின் ஆலய தரிசனத்தை விரிவான கண்ணோட்டத்தில் காண வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews

Post a Comment

0 Comments