தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான தமிழக அரசின் அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. கொரோனா நோய் பரவலை தடுக்க, 2020 மார்ச் 25ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு மாதமும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. புத்தாண்டில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்ற விவரம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments