இந்தியாவுக்கு தன்னை அனுப்பக் கூடாது என்று கோரி தீவிரவாதி தஹாவர் ராணா தாக்கல் செய்த மனுவுக்கு அமெரிக்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. மும்பைத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானிய கனடா வம்சாவளியினரான ராணா கடந்த 2009ம் ஆண்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் லாஸ் ஏஞ்சலஸ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல இந்தியாவின் என்.ஐ.ஏ. சார்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தம்மை இந்தியாவுக்கு அனுப்பக் கூடாது என்று ராணா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இது விசாரணையை தாமதப்படுத்தும் என்பதால் இந்த மனுவுக்கு அமெரிக்க அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments