நாடு முழுவதும் இன்று ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பொது இடங்களில் ஹோலி கொண்டாடவும் முகத்தில் வண்ணம் பூசவும் தடை விதித்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்துள்ளன. எனினும் வழக்கமான உற்சாகம் சிறிதும் குறையாத வகையில் காசியாபாத், மதுரா ,சிம்லா உள்ளிட்ட நகரங்களில் ஹோலி கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாட போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments