மியான்மரில் ஆயுதப்படை நாளையொட்டி நேற்று ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 91 பேர் உயிரிழந்தனர். மியான்மரில் பிப்ரவரி முதல் நாளில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில் தேசிய ஆயுதப்படை நாளையொட்டி நேற்று யாங்கன், மாண்டலே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. அதேபோல் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 91 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
from polimernews tamil|Sportsnews|Headlines|politics|tamil cinema - polimernews
0 Comments